சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள தொகுப்பாளினி டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத டிடி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு தனது நண்பர்கள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்ததையும் அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்வு செய்துள்ளார் டிடி. தனது பேபி டார்லிங்ஸ் என தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வு செய்து நன்றி கூறியுள்ளார் டிடி. இந்நிலையில் டிடியின் பிறந்தநாள் பார்ட்டியில் அவரது இரண்டாவது காதலரும் பங்கேற்றதாக தகவல் கசிந்துள்ளது .