நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் – இணையத்தில் தெறிக்கும் ஹாஷ்டேக்

தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு எதிர்நீச்சல் படம் மூலமா வெற்றி கொடி நாட்டி எத்தனையோ கஷ்டத்துக்கு மத்தியில் எதிர்நீச்சல் அடித்து இன்னைக்கு கோலிவுட்டின் சிறந்த என்டர்டெயினராகவும் கலெக்ஷன் கிங்காகவும் மாறியிருக்கும் சிவகார்த்திகேயனின் 36வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் டாக்டர், அயலான், டான் என அடுத்தடுத்த வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் எஸ்கேவின் பிறந்தநாளை ஏராளமான ஹாஷ்டேக்குகளை ஏற்படுத்தியவாறு டிரெண்ட் செய்து வருகின்றனர். 2008ம் ஆண்டு வெளியான தல அஜித்தின் ஏகன் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு மூலம் பேமஸ் ஆன தொகுப்பாளராக உருமாறி தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார். இதில் நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ்நாட்டின் குட்டீஸ்களின் உள்ளங்களை பிடித்ததுள்ளது சிவகார்த்திகேயன் தான் என நடிகர் விஜய்யே பாராட்டியிருந்தது அதிகபட்ச தகவல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *