2009 ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை முன்றலில் ஈழத்தமிழருக்கு நீதி கோரி தீக்குளித்து உயிர் நீத்த ஈகைப்பேரொளி முருகதாசன் மற்றும் தமிழர் தாயகத்தின் முக்கிய ஊடகரும் நாட்டுப் பற்றாளருமான சத்தியமூத்தி ஆகியோரின் 12 ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது . உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் தனது ஆக்கப்பூர்வமான வேண்டுகோள் என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு உலகத் தமிழ் ஜெனிவா மனித உரிமை முன்றலில் 2009 பிப்ரவரி 12ம் தேதி இரவு இரவு 8.15 முதல் 9.45 நேரத்துக்குள் முருகதாசன் தீக்குளித்து உயிர் நீத்தார் .
