கன்னட சினிமா நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு கல்யாணம் பண்ணிக் கொண்டனர். நடிகை மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே , கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக, நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தார் . இந்த நிகழ்வு கன்னட திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது . இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது நடிகை மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து நடிகை மேக்னா ராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் சொல்லி வந்தனர் . இப்போது தனது மகனின் புகைப்படத்தை காதலர் தினமான, நாளை வெளியிடப் போவதாக நடிகை மேக்னா ராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.