இருக்கன்குடி அருகே மது விற்பனை செய்த வாலிபர் கைது

சாத்தூர்: இருக்கன்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Read More

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேலும் 21 பேர் கொரோனா பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். 71 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேர் கொரோனா பாதிப்பு

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு சவுதி அரேபியா இளவரசர் முக மதுபின் சல்மான் உத்தரவிட்டார் என்று துருக்கி குற்றம் சாட்டியது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது. இந்த நிலையில் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி பட்டத்து …

Read More

டெல்லியில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: டெல்லி சுகாதாரத்துறை வெளியிடுள்ள அறிக்கையில்:- மாநிலத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,39,289 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 168 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,27,044 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 1,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Read More

சச்சின், கோலி மூலமாக பார்த்த செஞ்சுரியை, பெட்ரோல், டீசல் விலை மூலம் பார்க்கிறோம்- உத்தவ் தாக்கரே

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி சதம் அடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரி அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என அவரது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

Read More

ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த செங்கோட்டை சம்பவம் அவர்களால் (பா.ஜனதா) திட்டமிடப்பட்டது. டெல்லியில் உள்ள தெருக்கள் எங்களுக்கு தெரியாது என்பதால் எங்களை தவறாக வழிநடத்தினார்கள் என மக்கள் என்னிடம் கூறினர். கையில் கொடியை ஏந்தியவர்கள் பா.ஜனதா தொண்டர்கள். நம்முடைய விவசாயிகள் எதையும் செய்வார்கள். ஆனால், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள்’’ என்றார்.

Read More

பெண் மரணம் விவகாரம – மகாராஷ்டிர மாநில வனத்துறை மந்திரி ராஜினாமா

மகாராஷ்டிரா மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து புனே போலீசார் தற்கொலை காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருக்கும் சஞ்சய் ரத்தோட் பெயர் அடிப்பட்டது. இதனால் சஞ்ச் ரத்தோட் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், பட்ஜெட் கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என தெரிவித்தது. இந்த …

Read More

ஊத்தங்கரை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியை மேற்கொண்டார். அப்போது வரப்பு பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் வெங்கடாசலம் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read More

தர்மபுரி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்தூரில் இருந்து வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரியின் டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

Read More