தற்போது இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தற்போது இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார் . இதன் பிரகாரம் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப , மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணியின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,036 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 372 பேர் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் மற்ற 7 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என ராணுவத் தளபதி கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *