முக்கிய இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதுமாக எரிந்த வீடு

இலங்கையில் உடபுஸ்ஸலாவ – டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த ஐந்து பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளிப்படுத்துகின்றனர் . இந்த தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் , பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் போன்றவை தீக்கிரையாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *