முக்கிய மாகாணத்தில் இன்னும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பொலிஸார் உட்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார் . இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகளும், யாழ். போதனா மருத்துவமனையில் 360 பேரின் மதிரிகளும் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அவர்களில் 18 பேருக்கு தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *