முக்கிய வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

இலங்கையில் கிளிநொச்சி – பூநகரி, தெளிகரை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கிய மாடுகள் மூன்றும் உயிரிழந்துள்ளது . இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி பூநகரி காவல் பிரிவிற்கு உட்பட்ட மன்னார் – யாழ்ப்பாண பிரதான வீதியின் 4ம் கட்டை தெளிகரை பகுதியில் இந்த விபத்து நடைபெற்றள்ளது. இதில் வீதியில் தரித்திருந்த மாடுகளுடன் மோதிய வாகனம் இப்படி விபத்துக்குள்ளாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *