இலங்கையில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த விஷயத்தை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதில் இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . அந்த விதத்தில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,536 ஆக அதிகரித்துள்ளது .
