இலங்கையில் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த ஏராளமானவர்களுக்கு ஏற்பட்ட கதி

இலங்கையில் குளியாபிட்டியவில் உள்ள கொங்கொல்லா பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்று கொண்ட100 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த திருமண நிகழ்ச்சியில் மணமகனின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குளியாபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார். குளியாபிட்டி போதனா மருத்துவமனையின் பணியாளரான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருந்தநிலையிலும் திருமணம் நடைபெற்றதால் திருமண விருந்தில் பங்கேற்றிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார மருத்துவ அதிகாரி கூறினார் . அதையடுத்து , 35 வீடுகளைக் கொண்ட குடும்பத்தினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *