வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆட்டத்தில் பிவி சிந்து ஜு யிங்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 21-19 எனக் கைப்பற்றிய பிவி சிந்து, 2-வது சுற்றை 12-21 எனவும், 3-வது மற்றும் கடைசி சுற்றை 17-21 என இழந்து தோல்வியடைந்தார். முதல் சுற்றின் இடைவேளையின்போது பிவி சிந்து 8-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 10-14 என பின்தங்கினார். ஆனால் 16-16 என சமன் செய்த பிறகு முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பிவி சிந்துவால் தைவானின் ஜு யிங் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 0-6 என பின்தங்கிய பிவி சிந்து இடைவேளையின்போது 4-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் ஜு யிங் 21-12 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது போட்டியில் யிங் 6-3 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 6-6 என சமன் பெற்றார். ஆனால் இடைவேளையின்போது யிங் 11-9 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 13-15, 13-17 என பின்தங்கியபிறகு 17-19 என நெருங்கி வந்தார். ஆனால் யிங் 21-17 என 3-வது செட்டை கைப்பற்றி பிசி சிந்துவை தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *