ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சில வீரர்கள் ஒரு மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். இப்படிபட்ட நிலையில் ஐசிசி-யின் சிறந்த வீரர்கள் தேர்வு பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மாதந்தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை ரசிர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
