ஐதாராபத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவருக்கு, 21 வயதில் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டதால் பெண்கள் மீது அவருக்கு கோபத்துடன் பழிவாங்கும் எண்ணமும் தோன்றியது. இதனால் தனியாக இருக்கும் பெண்களை பார்த்து ஆசைக்கு இணங்கினால் பணம் தருகிறேன் என ஆசைவார்த்துக் கூறி அவர்களை தன்பக்கம் இழுத்து, இப்படி கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார். சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்போதுதான் மேற்கொண்ட விசயங்கள் தெரியவந்துள்ளது.
