அமெரிக்க குடியேற்ற கொள்கை : நாடு கடத்தும் முறை நிறுத்திவைப்பு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் நேற்று முன்தினம் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில்,  அமெரிக்காவில் நியாயமான குடியேற்ற கொள்கை இருப்பதை உறுதி செய்யும் வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 100 நாட்கள் வரையில், குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்துவதை நிறுத்தி வைக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *