இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் நடைபெற்ற நாள் ஜனவரி 22, 1849

613 – கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான். 1506 – 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. 1517 – முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். 1555 – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது. 1808 – பிரெஞ்சு இராணுவத்தினரின் முற்றுகையை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் போர்த்துகலில் இருந்து வெளியேறிய போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் பிரேசில் வந்து சேர்ந்தனர். 1840 – பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர். 1849 – இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி சீக்கியப் படை சரணடைந்தது. 1863 – உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது. 1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் …

Read More

கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் தயாரிக்கப்பட்ட நாள் ஜனவரி 22, 1889

1889 – கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. 1899 – ஆறு ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர். 1901 – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார். 1905 – இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது. 1906 – பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் உயிரிழந்தனர். 1915 – மெக்சிக்கோ, குவாதலஹாரா நகரில் தொடருந்து ஒன்று பள்லம் ஒன்றில் வீழ்ந்ததில், 600 பேர் உயிரிழந்தனர்.

Read More

இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 22

1919 – உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன. 1927 – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் துப்ருக் நகரை  நாட்சிப் படைகளிடம்  இருந்து கைப்பற்றியது. 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின்  குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்தது. 1945 – இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன் முதலாக கொழும்பு நகர மண்டபத்தில் கூடியது.[1] 1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது. 1964 – கென்னத் கவுண்டா வடக்கு றொடீசியாவின் முதலாவது அரசுத்தலைவரானார். 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

Read More

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்ட நாள் ஜனவரி 22, 1973

1969 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் மீது மாஸ்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் அவர் காயமெதுவுமின்றித் தப்பினார். 1973 – அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட  கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. 1973 – நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர். 1980 – நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் ஆந்திரே சாகரவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 1987 – பிலிப்பீன்சு பாதுகாப்புப் படைகள் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10,000–15,000 பேர் மீது சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 1992 – சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர். 1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். 2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

Read More

ஜனவரி 22, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1552 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. 1618) 1561 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1626) 1573 – ஜான் டன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1631) 1711 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. 1791) 1788 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1824) 1870 – சேசாத்திரி சுவாமிகள், தமிழகச் சித்தர் (இ. 1929) 1891 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937) 1898 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (இ. 1948) 1906 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1936) 1909 – ஊ தாண்ட், பர்மியக் …

Read More

ஜனவரி 22, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1666 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592) 1897 – ஐசக் பிட்மன், சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1813) 1901 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (பி. 1819) 1922 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854) 1922 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், பதிப்பாளர் (பி. 1854) 1947 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்துப் பன்மொழிப் புலவர் (பி. 1875) 1973 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (பி. 1908) 2008 – ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (பி. 1979) 2014 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924) 2018 – ஏ. ஈ. மனோகரன், ஈழத்துப் பொப் இசைப் பாடகர், நடிகர் 2018 – அர்சலா கே. லா …

Read More

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் கொரோனா : ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்து முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,43,646 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு …

Read More

யோகிபாபுவின் பொம்மை நாயகி – வெளியானது பர்ஸ்ட்லுக்

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களின் மூலம் சிறந்த தயாரிப்பாளாக வளம் வரும் இயக்குநர் பா.ரஞ்சித், தற்போது தான் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அதன்படி ‘பொம்மை நாயகி’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ஷான் இயக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Read More

காதலர் தினத்திற்காக மோதிக்கொள்ளும் தனுஷ் – சந்தானம்

கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.  தியேட்டாகளில் 50% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், தற்போது முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை தியேட்டர்களில், வெளியிட தயராகி வருகின்றனர். அநத வகையில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு போட்டியாக அதே நாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் …

Read More

சுவையான மிளகு காளான்

தேவையான பொருட்கள் காளான் – 100 கிராம் மிளகு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – ஒரு இணுக்கு செய்முறை காளானை கழுவி சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளவும். மிளகை மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் காளானைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். காளான் தண்ணீர் விடும், அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். தண்ணீர் …

Read More