ஆஸ்திரேலிய கேப்டனுக்கு அஷ்வின் பதில் ட்விட்

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னினயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் திணறிய நிலையில்,  அஸ்வின் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நீ காபாவுக்கு வந்து பார் என்பதுபோல சவால் விடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பெயின். இதற்கு அஸ்வினும், நீயும் இந்தியா வந்து பார், அதுவே உன்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்பதுபோல அப்போதே உடனடியாகப் பதிலளித்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை டேக் செய்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் டுவீட் செய்துள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளது  “காபாவிலிருந்து மாலை வணக்கம். காபாவில் என்னால் விளையாட முடியவில்லை, மன்னிக்கவும். எங்களை வரவேற்றதற்கும், இந்தக் கடினமான காலங்களில் கடுமையான கிரிக்கெட்டை விளையாடியதற்கும் நன்றி. இந்தத் தொடரை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *