பிரண்டை வற்றல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அரிசி அ அரிசி நொய் – 400 கி
பிரண்டை – 1 கப்(பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2 அ 3
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கு
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அரிசியை கழுவி,தேவையான தண்ணீர் சேர்த்து,குழைய வேக வைத்துக்கொள்ளவும். அல்லது, வேக வைத்த அரிசியை கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிரண்டை  மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை ஆறவைத்து, மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். குழைந்த சாதத்துடன்,அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.

இதனுடன் தேவையான உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும்.
இதனை நன்றாக கலந்து நெல்லிக்காய் அளவுக்கு சிறியதாக கிள்ளி ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து நன்கு வெயிலில் காய வைக்கவும். 2 அ 3 நாட்கள் நன்றாக காய வைக்கவும். இவற்றை நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். சுவையான பிரண்டை வற்றல் தயார். இது சாம்பார் சாதம்,ரசம் சாதம்,காரக் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *