அவுட் ஆனது குறித்து வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷுப்மான் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். ஆனால் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா, ‘‘ஆட்டமிழந்த பந்தை எந்த இடத்தில் சந்திக்க விரும்பினேனோ, அந்த இடத்தில் சந்தித்தேன். ஆனால் பந்தை நான் ஹிட் செய்ய விரும்பியதுபோல் சரியாக பேட்டில் படவில்லை. லாங்-ஆன் – டீப் ஸ்கொயர் லெக் பீல்டர்களுக்கு இடையில் அடிக்க நினைத்தேன். பந்து அதற்கு ஏற்றவாறு பேட்டில் படவில்லை.

ஆடுகளத்தில் ஸ்விங் இல்லை என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றபடி சற்று மாறிக்கொண்டேன். நான் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதுகுறித்து வருத்தம் அடையமாட்டேன். களம் இறங்கி பந்து வீச்சாளரை துவம்சம் செய்து அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது பணி. யாராவது ஒருவர் முன்வந்து பந்து வீச்சாளர்களுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்பது பற்றி யோசிப்பது அவசியம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *