14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தென்ஆப்பரிக்கா

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கெண்டு இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. இதனால் இலங்கை அணி அந்த சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. அதன்பிறகு பாகிஸ்தானில் சென்று எந்த அணியும் விளையாடவில்லை

தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் ஜனவரி 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் ராவல் பிண்டியில் பிப்ரவரி 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலும் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 11-ந்தேதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *