அஸ்வின் மட்டுமே இதை செய்வார் – முரளீதரன் நம்பிக்கை

தற்போதுள்ள சுழற்பந்து வீரர்களில் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று முரளீதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முரளீதரன் கூறுகையில்,

கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்து வீரர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டும் பார்க்கிறேன். சென்னையை சேர்ந்த அஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். அவரைத் தவிர்த்த மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனால்கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது நம்பிக்கை இல்லை. தற்போதுள்ள நிலையில் பவுலர்கள் நேர்த்தியாக நீண்ட நேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். வேகபந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீரர்களால் தான் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஆனால் பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்.

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளீதரன் 133 டெஸ்டில் 230 இன்னிங்சில் விளையாடி 800 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2வது இடத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் வார்னே  273 இன்னிங்சில் 708 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்திலும், இந்தியாவை சேர்ந்த கும்ப்ளே 236 இன்னிங்சில் 619 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *