மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட்

பிரிஸ்பேன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் அபாரமாக 108 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து.  பொறுப்புடன் ஆடிய பெய்ன் 102 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.  தமிழக வீரர்கள் டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ‌ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் ஆட்டத்தின் 7-வது ஓவரில் சுப்மன்கில் 7 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா ஜோடி நிதானமாக ஆடிய நிலையில, சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 44 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து புஜாராவுடன் கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். 26-வது ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் போட்டி ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் லயன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *