கல்லீரல் சுத்தமாகும் எலுமிச்சை

அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகள் சீராக இயங்குவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, அது கல்லீரலில் நச்சுக்கள் தங்குவதையும் தடுக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் அதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

Read More

ஜனவரி 17, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

395 – பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக  கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. 1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர். 1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார். 1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் பொருட்டு மதீராவில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார். 1595 – பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.

Read More

 மெக்சிக்கோ விடுதலைப் போர் ஜனவரி 17, 1811

1608 – எத்தியோப்பியப் பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது. 1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்லசுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது. 1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்தார். 1811 – மெக்சிக்கோ விடுதலைப் போர்: எசுப்பானியாவின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர். 1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார். 1852 – ஐக்கிய இராச்சியம் வால் ஆற்றுக்கு வடக்கே பூர்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தை  தென்னாபிரிக்கக் குடியரசுடன் செய்து கொண்டது.

Read More

முதலாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 17,1915

1893 – அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது. 1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது. 1912 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் இராபர்ட் பால்க்கன் இசுக்காட் தென் துருவத்தை அடைந்தார். 1915 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியத் துருக்கியை சரிக்காமிசு போரில் வென்றது. 1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது. 1920 – ஐக்கிய அமெரிக்காவில் மதுசாரத் தடை அமுலுக்கு வந்தது.

Read More

இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வு ஜனவரி 17, 1944

1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 1944 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர். 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின. 1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர். 1946 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது. 1948 – தென்கிழக்கு ஆசியாவில் தனது குடியேற்றத்தை மீண்டும் ஆரம்பிக்க முயன்ற நெதர்லாந்துக்கும், இந்தோனேசியாவுக்கும் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது.

Read More

வளைகுடாப் போர் தொடங்கிய நாள் ஜனவரி 17, 1991

1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர். 1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1981 – பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார். 1991 – நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார். 1991 – வளைகுடாப் போர் ஆரம்பமானது. 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக சப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.

Read More

காங்கோவில் எரிமலை வெடிப்பு ஜனவரி 17, 2002

1994 – லாசு ஏஞ்சலசில் 6/7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர். 1995 – சப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர். 1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார். 2002 – காங்கோவில் நைராகொங்கோ எரிமலை வெடித்ததில் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர். 2007 – வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது. 2010 – நைஜீரியாவில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

Read More

ஜனவரி 17, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1504 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572) 1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1790) 1899 – அல் கபோன், அமெரிகக்க் குற்றக் குழுத் தலைவர் (இ. 1947) 1905 – தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1986) 1917 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், இயக்குநர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1987) 1922 – தோன்சே ஆனந்த் பை, இந்திய அரசியல்வாதி, வங்கியாளர் (இ. 1981) 1936 – அ. தங்கத்துரை, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1997) 1942 – முகம்மது அலி, அமெரிக்கக் குட்டுச்சண்டை வீரர் (இ. 2016) 1945 – ஜாவேத் அக்தர், இந்தியக் கவிஞர், இசையமைப்பாளர் 1962 – ஜிம் கேரி, கனடிய-அமெரிக்க நடிகர் 1964 – மிசெல் …

Read More

டிசம்பர் 17, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

395 – முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (பி. 347) 1824 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (பி. 1760) 1930 – கௌஹர் ஜான், இந்திய இசைக் கலைஞர் (பி. 1873) 1940 – செ. இராசநாயகம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1870) 1961 – சாமி சிதம்பரம், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (பி. 1900) 1961 – பத்திரிசு லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் 1-வது பிரதமர் (பி. 1925) 1997 – கிளைட் டோம்பா, புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர் (பி. 1906) 2005 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1921) 2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1925)

Read More

தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், திரைப்பட நடிகை பத்மினி பிரியதர்சினி, இறந்த தினம்

2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943) 2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927) 2010 – ஜோதி பாசு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் (பி. 1914) 2010 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1937) 2012 – எம். எஸ். பொன்னுத்தாய், தமிழகப் பெண் நாதசுவரக் கலைஞர் 2014 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடியத் தொழிலதிபர் (பி. 1962) 2014 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931) 2016 – பத்மினி பிரியதர்சினி, தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், திரைப்பட நடிகை (பி. 1944) 2016 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர் (பி. 1955)

Read More