உங்கள் உடலினை நச்சுக்களிலிருந்து காப்பாற்றும் உறுப்பு. நீங்கள் வாயில் போடும் எந்த ஒன்றும் கல்லீரல் மூலமாகவே பதப்படுத்தப்படு கின்றது. கல்லீரலுக்கு ஒரு அபார சக்தி உண்டு. பழுதடைந்த செல்களுக்கு பதிலாக தானே புது செல்களை உருவாக்கி தானே சரி செய்து கொள்ளும். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஆக கல்லீரல் பாதுகாப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள். மதுவை அடியோடு விட்டு விடுங்கள். எதற்கெடுத் தாலும் சிறு தொந்தரவுக்கு கூட மருந்துகள் அள்ளி போட்டுக் கொள்ளும் பழக்கத்தினை விடுங்கள். அது எந்த வைத்திய முறை மருந்தாக இருந்தாலும் மேற் கூறியது பொருந்தும்.
* புகை கூடவே கூடாது.