உணவு செரிமானம் வாயில் உணவினை நன்கு மெல்வதில் ஆரம்பித்தாலும் சிறு குடலிலேயே மிக அதிக அளவு செரிமானம் நிகழ்கின்றது. நன்கு அரைத்து கூழான உணவு சிறு குடலில் என்சைம்கள், பைல் உப்புகளால் முழுமையாக செரிக்கப்படுகின்றது. குறைந்த அளவு உணவு உண்டால் வயிறு சிறிதாகாது. அதன் அளவு அப்படியேத்தான் இருக்கும். வயிற்றினை சுருக்க இன்று அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
குறைந்த அளவு உணவு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பினை குறைக்கும். இது போலத்தான் வயிற்றுக்கான உடல் பயிற்சி வயிற்றிலுள்ள வயிறு உறுப்பினை குறைக்காது. வயிற்று தசைகளை இறுக்கி கொழுப்பினை கரைக்கும். உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது.
எனவே உணவுப் பாதை நோய்கள் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய ஆரோக்கியம். உணவுப் பாதை என்பது வாயில் ஆரம்பித்து உணவுக் குழல், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என செல்கின்றது. இதில் கணையம், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் இவையும் அடங்கும்.