உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இன்று இரவு 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் நொய்டாவிலிருந்து 37 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்ததாககவும், இது ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நில அதிர்வுகள் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
