நடிகர் சிம்பு நடிப்பில் குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ஈஸ்வரன் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது. இது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகும் 45வது படமாகும். இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கவுதம் உள்ளிட்ட சிலருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காரில் கிரிவலம் சென்ற அவர் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற வித்தியாசமாக கட்டப்பட்ட இடுக்கில் நுழைந்து வெளியே வந்தார். அவர் ஈஸ்வரன் படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே திருவண்ணாமலை வந்துள்ளார்.