ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டரை கண்டுகளித்த நடிகர் சூரி

பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள படம் மாஸ்டர்நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படம், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் ரசிகர்கள் விழா போன்று கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்தார். படம் முடிந்த பின் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எல்லா துறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அதிலும் சினிமா துறை ரொம்பவும் பாதிக்கப்பட்டது.

தற்போது விஜய், சிம்பு படம் மூலம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. கொரோனா தடுப்பு விதிகளையும் ரசிகர்களும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ? அதே அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாஸ்டர் படம் மாஸ் ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *