சைக்கிளில் படப்பிடிப்புக்கு செல்லும் தீரன் பட நடிகை

தமிழ் திரையுலகில், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டில்  அஜய் தேவ்கன்  ஜாடியாக மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘மே டே’ என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *