வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி மாநில எல்லைகளில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் அவர்கள் போராட்டம் 50-வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழவில் உள்ள நான்கு பேரும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவானவர்கள். குழு முன் ஆஜராகமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காசிபூர் எல்லையில் லோரி பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் வேளாண் சட்டங்கள் நகலை தீயிட்டு எரித்தனர்.
