சூப்பரான தயிர் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்

கோழி – 1/2 கிலோ

தயிர் – 1 கப்

வெங்காயம் – 3

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – 1ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்

மஞ்சள்த்தூள் – 1ஸ்பூன்

தனியாத்தூள் – 1ஸ்பூன்

சீரகத்தூள் – 1ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

மிக்சியில் வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய்,மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், ஆகியவற்றை சேர்த்து,அரைத்த தக்காளியையும் சேர்த்து பச்சை  வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய கோழி தனியாத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும், நன்றாக கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு திக்காக வந்தவுடன் இறக்கினால் சுவையான தயிர் சிக்கன் கிரேவி ரெடி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *