கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சனின் தற்போதைய நிலை

இலங்கையில் நீதிமன்றத்தினை அவமதித்தது தொடர்பாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நீர்கொழும்பு – பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியிருக்கிறார் . இதில் சிறைச்சாலை அதிகாரிகள், அவரை சிறைச்சாலை பேருந்து மூலம் பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *