இலங்கையில் வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை அவிசாவளை, தல்துவ கனுகொல்ல தோட்டப் பகுதியின் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த ஆர்.வசந்த (வயது 23) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று காலை சீதாவக்கை கைத்தொழில் பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக காலை 6.30 மணியளவில் கனுகொல்ல வீதியில் இருந்து தல்துவ பிரதான வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பிரதான வீதியில் வேகமாக வந்த வான், மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
