அரசியல் சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள தகவல்

இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை அவர்களின் சொந்த அரசியலுக்காக தியாகம் செய்யக்கூடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத் தெரிவித்தார். நேற்று முன்தினம் வடக்கு கிழக்கில் நடத்தப்பட்ட ஹர்தால் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அரசியல் இலட்சியத்துடன் அழைப்பு விடுக்கின்றேன். இன்றைய கால இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டியதோடு, மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *