அதிக எதிர்பார்ப்பில் இருந்த மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து கொண்டாடி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் சர்கார் மற்றும் பைரவா என இரு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வயலினில் குட்டி ஸ்டோரி பாடலை இசைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களின் விமோசனமாக இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக மாஸ்டர் ரிலீசாகி இருக்கிறது . இந்நிலையில் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
