நான்காவது டெஸ்ட் : இந்திய வீரர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறது. இரு அணிக்கும் இடையேயான நான்காவது  மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக பிரிஸ்பேனில் தங்கும் இந்திய அணியினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் சென்று விளையாட தயக்கம் காட்டியது.
இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிக்காக சிட்னியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி இன்று பிரிஸ்பேன் புறப்பட்டு செல்கிறது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்டில் விளையாடுவதற்காக பிரிஸ்பேன் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், தங்கியுள்ள ஓட்டலில்  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் படுக்கையை தயார் செய்வது போன்ற வேலைகளையும் தாங்களே செய்ய வேண்டி இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *