சையத் முஷ்டாக் அலி கோப்பை : 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழக அணி

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – அஸ்ஸாம் அணிகள் மோதியது. டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அஸ்ஸாம் அணி 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *