9 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. பெங்களூருவில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில்  கர்நாடக அணி – பஞ்சாப் அணி மோதியது. முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கர்நாடக அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *