இலங்கையில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து இணையதளத்தின் மூலம் பல்வேறு விதத்தில் நிதி மோசடிகளை செய்து வரும் இரண்டு வெளிநாட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புகார்களுக்கு அமைய அவர்கள் கல்கிசை பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
