தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றவர் கால்வாயில் விழுந்து சாவு

இலங்கையில் அம்பலங்கொட – மீட்டியாகொட பகுதியில் பெண் நர்ஸ் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதில் அம்பலங்கொட – மீட்டியாகொட பகுதியில் மல்வென்ன ரயில் பாதைக்கு அருகில் நேற்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இந்த த சந்தேகநபர் அந்த வழியில் சென்றுக் கொண்டிருந்த 36 வயதுடைய பெண் நர்ஸ் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது பிரதேசவாசிகள் அவரை விரட்டிப் பிடிப்பதற்காக , துரத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அந்த நபர் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் அங்கிருந்த கால்வாயிலில் பாய்ந்துள்ளார். இதில் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த அந்த நபரை பிரதேச வாசிகள் இணைந்து மீட்டு ஹிக்கடுவ – ஆராச்சிகந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆயினும், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *