இலங்கையில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள பெருமளவு சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. வடமத்திய மாகாணத்தில் இயங்கிவரும் அவந்தி தேவி சிறுவர் பராமரிப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்கள் பலரும் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக, பல்வேறு புகார்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சிறுவர் விவகார அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டிருக்கின்றது. இதையடுத்து இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
