இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. விழுப்புரம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனுசு மகன் கந்தன் (வயது 30). விழுப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சுகன்யா(27). அவரது மகன் சுதன் (1) மற்றும் தனுசு ஆகியோர் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கழிவறைக்கு செல்வதற்காக தனுசு, வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது யாரோ மர்ம ஆசாமி , வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுகன்யாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியிருக்கிறார் . இந்த நகை பறிப்பு குறித்த புகாரின்பேரில் அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
