தற்போது சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகளுக்கிடையே நடைபெற்ற சண்டை

தற்போது இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகள் தமக்கிடையே மோதிக்கொண்டதை கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டுள்ளது. இதில் காலி – பெந்தோட்டையில் உள்ள தாஜ் விடுதியில் தங்கியிருந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகளில் சிலரே தமக்கிடையே மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது . A group of Ukrainian tourists were caught on camera recently embroiled in an argument at the Taj Bentota Resort and Spa in Bentota. The video has …

Read More

சென்னை விமான நிலையத்தில் 4.15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து விமான பயணிகள் மூலம் தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இன்று வளைகுடாவில் இருந்து வந்த விமான பயணிகள் 8 பேரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தங்கத்தை பேஸ்ட்-ஆக உருக்கி மாத்திரியைாக விழுங்கி கொண்டு வந்துள்ளனர். அதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மொத்த தங்கத்தின் மதிப்பு 2.17 கோடி ரூபாய் (4.15 கிலோ) ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களில் ஏழு பேரை கைது செய்தனர்.

Read More

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் போலீசாா் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளவாப்பாளையம் பஜனை பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் (வயது 41) என்பவர் ஒரு ஓட்டலில் மது விற்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read More

முக்கிய பகுதியொன்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட லாக் டவுண்

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நேற்று காலை முதல் கேகாலை சுகாதார சேவை அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட புலுகஹதெனிய – சமகிகம, எட்டோருவாக பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை புலுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பண்டார அத்தநாயக்க உறுதிப்படத்தியிருக்கிறார் . கமகிகம – எட்டோருவாவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 15 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன் அந்தப் பகுதியில் 8 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.  அதே சமயம் …

Read More

ஜனாதிபதி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என கூறும் முக்கிய நபர்

இலங்கையில் துறைமுகம் தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார் . அதிலும் அரசாங்கத்தின் ஒரு சில அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்களை செவிமடுப்பது தேவையற்றது எனவும் தெரிவித்தார் . நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கொண்டு கருத்துத் தெரிவித்த போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த தகவலை கூறினார். அஜித் நிவாட் கப்ரால், தயா ரத்நாயக்க ஆகியோர் இந்த விசயத்தில் மாறுபட்ட கருத்துக்களை சொல்லி வருவதாக தேரர் சுட்டிக்காட்டி கொண்டுள்ளார் .

Read More

இலங்கையில் மேலும் பல பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று

தற்போது இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார் . நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் கூறியுள்ளார் . அதன் பிரகாரம் , இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 62,851 ஆக கூடியுள்ளது.

Read More

கோர்ட் உத்தரவை மீறி நடைபெற்ற சம்பவம் – தெரிவிக்கப்பட்ட தகவல்

இலங்கையில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார் . தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற பிரத்யேக ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறுகையில், குருந்தூர் மலையில் உள்ள சூலம் உடைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதற்கு பிறகு து.ரவிகரன் பொலிஸிலே புகார் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பொலிஸாருடன் …

Read More

திருச்செங்கோட்டில் சாலை விதிகளை மீறிய 17 பேருக்கு அபராதம்

எலச்சிபாளையம்: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனை நடந்தது. அப்போது ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமலும், செல்போன் பேசி கொண்டு என சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 17 பேருக்கு சோதனை அறிக்கை அளித்து ரூ.9,200 அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

திருமானூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

கீழப்பழுவூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜனின் மனைவி மங்கையர்க்கரசி(வயது 50). இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து அவர் கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

இலங்கை மக்களிடம் தொற்று நோய் மருத்துவ நிபுணர் விடுத்துள்ள வேண்டுகோள்

தற்போது நாட்டில் வழங்கப்படும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும். இதனை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என இலங்கை தொற்று நோய் மருத்துவ நிபுணர் வைத்தியர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுதல் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, நேற்றைய தினம் வடக்கு மாகாணத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசியாகும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. பக்கவிளைவுகள் மிக மிக குறைவு. இது மிகவும் திறன்மிக்க தடுப்பூசி. ஆகவே,பொதுமக்கள் அனைவரும் போட்டுக் கொள்வது முக்கியம் …

Read More