2021 – Dinaseithigal

சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்கு

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட வணிகதள பகுதிகளுக்கு வருகின்றனர். அவ்வாறு திரளாக வரும் போது கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முக கவசம் அணியாமல் யாரும் வருகிறார்களா? என்று மாநகராட்சியும், போலீஸ் துறையும் இணைந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் சென்னையில் நேற்று முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்து …

Read More

முக்கிய மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கூறியுள்ளார் . இனி வரும் வெள்ளிக்கிழமை வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது .

Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் பிரபல விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் மாற்றம்

இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் மேலும் ஐந்து புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார் . இதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சகம் சர்வதேச அளவில் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன .

Read More

அமைச்சர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த கேரள முதல்வர்

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 128 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதில் அமைச்சர்களுக்கு எதிராக 24 வழக்குகளும், எம்எல்ஏக்களுக்கு எதிராக 104 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இது தவிர இடது சாரி கூட்டணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 848 வழக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பதிவு ெசய்யப்பட்ட 55 வழக்குகளும், பாஜவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட …

Read More

மாகாணசபைத் தேர்தலை எதிர்நோக்கி செயல்படும் பிரபல கட்சி

இப்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார் . நாட்டில் இனி வரும் 11 ம் தேதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத மற்ற சிறு கட்சிகளை சந்திக்கவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் . நேற்று சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விஷயத்தை குறிப்பிட்டார்.

Read More

பட்டாசு கிடங்குகளை சீல் வைத்த அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இதர இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு கிடங்குகளை கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

Read More

லீக் கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியடைந்த மான்செஸ்டர் சிட்டி அணி

லண்டன் ஸ்டேடியத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற முக்கியமான கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி-வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் மோதின. அதில் பலம் பொருந்திய மான்செஸ்டர் சிட்டி அணியை வெஸ்ட் ஹாம் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் ‘நான்கு முறை தொடர் சாம்பியனான’ மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மான்செஸ்டர் சிட்டி அணியை பெனால்ட்டி முறையில் 5-3 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி வெற்றி கண்டது.

Read More

இலங்கையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நிலவும் அபாயம்

இப்போது இலங்கையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் சமீப நாட்களில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிறப்பு காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார் .

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேம்பி தேம்பி அழுத பெண் போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமில் மது மிதா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இசைவாணி எது சொன்னாலும் கேட்பது கிடையாது . யாருமே என் பேச்சை கேட்பது இல்லை. இது அவங்க வாரம் என்பதால் அவங்கதான் ரூல் பண்றாங்க, அவங்க என் போல கடுப்பில் இருக்காங்க நான் எதுவுமே பண்ணவில்லை என்று கூறி அழுகிறார். இதையடுத்து மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்திக்கொண்டு வருகிறார்கள் .

Read More

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் 3-வது முறையாக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டாரி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இந்த மனு மீது இன்று ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அதில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட ஐகோர்ட்டு, போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் …

Read More