முக்கிய பிரதேசத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று

இலங்கையில் யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும், கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார் . யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் கொழும்பிலிருந்து வருகை தந்த அவரை சுகாதாரத் துறையினர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி கண்காணித்தனர். இதில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

சேலம் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 87 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.

Read More

கும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்- மகன் பலி

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் தோப்புத்தெரு பகுதியை சேர்ந்த இளையராஜா மனைவி அபிராமி. இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் சாலையோரம் விழுந்த இளையராஜா காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது பின்னால் உட்கார்ந்திருந்த அபிராமி காயமின்றி தப்பினார். பின்னர் அந்த கார் எதிரே ஸ்கூட்டரில் வந்த குமரன்குடி குடியானத்தெரு பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற கலியமூர்த்தி மற்றும் அவரது தாயார் அஞ்சம்மாள் ஆகியோர் மீதும் …

Read More

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எங்கள் மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார் . உயிரிழந்த மாவீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய இவர் தனது கருத்தை தெரிவித்தார் . உயிரிழந்த மாவீரர்களுக்கு தனது வாசஸ்தலத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி கொண்டுள்ளார் .

Read More

சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மாபேட்டை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டபோது கோபால்செட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த நவீன்ராஜ், தமிழ்செல்வன், ஜீவா ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Read More

முக்கிய மாவட்டத்தில் நிவர் புயலால் பெரும்பாலானோருக்கு ஏற்பட்ட பாதிப்பு

இலங்கையில் நிவர் புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி இ மகேசன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விஷயத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், நிவர் புயல் மற்றும் மழை காரணமாக யாழ். மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1424 குடும்பங்களைச் சேர்ந்த 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில் கொடும் காற்று காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவினையும் உள்ளடக்கியதாக 444 …

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும்

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read More

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

நிவர் புயலையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல் சேலம் மாவட்டத்திலும் மழை பெய்தது. சேலம் மாநகரை பொறுத்தவரையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் எடப்பாடி-2.2., வாழப்பாடி-1, சேலம்-3, பெத்தநாயக்கன்பாளையம்-7, மேட்டூர்-5.4, சங்ககிரி-5.4, ஆணைமடுவு-10, கரியகோவில்-10, ஆத்தூர்-4.4 என மழையளவு மில்லி மீட்டரில் பதிவானது.

Read More

கொட்டாம்பட்டி அருகே கனமழையால் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை

கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழையை எதிர்பார்த்து இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். அவைகள் நன்றாக வளர்ந்து இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்தது. இதன் காரணமாக பல ஆயிரம் ரூபாய் வரை ஏக்கருக்கு செலவளித்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது நாள் வரை தண்ணீர் இல்லாமல் கடும் …

Read More

முக்கிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமான குடியிருப்புகள்

இலங்கையில் நோர்வூட் காவல் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பெக்டரி – லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 12 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த திடீர் தீவிபத்து நேற்று ஏற்பட்டுள்ளது . இதில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பக்கத்தில் இருப்பவர்கள் முயற்சித்து வருகின்ற போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில் குடியிருப்பாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகிய போதிலும் மீதமுள்ள உடமைகளை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுப்பட்டு கொண்டு வருகிறார்கள்.

Read More
error: Content is protected !!