கர்நாடகத்தில் இன்று மேலும் 5,938 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் இன்று மேலும் 5,938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,814 ஆக உய்ர்ந்துள்ளது. இன்று மேலும் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,683 ஆக உயர்ந்துள்ளது மேலும் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 4,996 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Read More

மராட்டியத்தில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

மும்பை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புதீவிரமடைந்து வரும், அதிக பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் இன்று மேலும் 10,441 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,82,383 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 258 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.  இன்று 8,157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read More

சோனியாகாந்தி பதவி விலகுவதாக வந்த செய்தி தவறானது : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தகவல்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி  தற்போது ல தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “ சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என்றார்.

Read More

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

புதுடெல்லி, மத்திய அரசு சார்பில், நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்து நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் …

Read More

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆய்வுப்பணி 7 ஆண்டுகள் தொடரும் என் அறிவிப்பு

சென்னை, உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் நிலவில் தரை இறங்குவதில் தோல்வியை தோல்வியை தழுவினாலும், கடந்த ஒரு ஆண்டுகளாக விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுக்கான படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பி வருகிறது. இதுகுறித்து இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலத்தில் ஆய்வுப்பணிக்காக பொருத்தப்பட்டு இருந்த ஆர்பிட்டர் கலன் மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ …

Read More

காஷ்மீர் விவகாரத்தில் சீனா பாகிஸ்தான் கூட்டறிக்கை : இந்தியா நிகராகரிப்பு

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினை மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே வரலாற்று பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும். மேலும் அங்கு நடைபெறும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் நிலைமையை சிக்கலாக்குவதால், அதை சீனா எதிர்க்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டறிக்கையை இந்திய …

Read More

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் எப்போது? சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா விளக்கம்

புதுடெல்லி, உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் 3 நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி ம்ருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையிர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா  கண்டுபிடித்துள்ள ‛கோவிஷீல்ட்’ தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என அந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து வரும்  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  நிறுவனம் …

Read More

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க பிரதமருக்கு கடிதம்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வும், வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இன்ஜினியரிங் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆனால் கொரேனா …

Read More

இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் சோனியா காந்தி

புதுடெல்லி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில். சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அமைப்புகளை முழுமையாக மாற்றியமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதற்கு பதிலளித்தள்ள சோனியாகாந்தி, …

Read More

மயில்களுக்கு உணவளிக்கும் மோடி : வைரலாகும் வீடியோ

புதுடெல்லி, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில்  தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அப்போது அவர் நடைபயிற்சி செய்யும் போது, அவருடன் மயில்களும் நடந்து செல்கின்றன. தற்போது மோடி இது குறித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். भोर भयो, बिन शोर, मन मोर, भयो विभोर, रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना, मनमोहक, मोर निराला। …

Read More
error: Content is protected !!