மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

உலகம் முழவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

Read More

ஐபிஎல் தொடரில் விவோ ஸ்பான்சரை நீக்க வேண்டும் : பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கோரிக்கை

ஐபிஎல் விரைவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விவோ ஸ்பான்சர் நீக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நெஸ் வாடியா கோரிக்கை வைத்துள்ளார். லடாக் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிர் உயிர் இழந்ததால் இந்தியா முழுவதும் சீனாவை எதிர்த்து பெரிய எதிர்ப்பலை எழுந்தது. சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் 59 ஆப்புகளை இந்தியாவில் தடை செய்யவும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விவோ ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்த ஐபிஎல் …

Read More

ரிஷப் பண்ட் தடுமாற்றத்திற்கு இதுதான் காரணம் : விளக்கம் அளித்த முகமது கைப்

இந்திய அணியில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடி வரும் பண்ட் அறிமுக தொடர்களில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வந்தாலும், தற்போது கடந்த பல வருடங்களாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற பண்ட் தற்போது சர்வதேச அணியில் திணறி வருகிறார். இதனால் அவர் தற்காலிகமான நீக்கப்பட்டு அவருக்கு பதிலான கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பண்ட்டின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் குறித்து இந்த பேட்டியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் …

Read More

ஜோஸ் பட்லருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் : தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்  கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், 2-வது இன்னிங்சில் 9 ரன்களும் அடித்தார். இவர் கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்சில் படலர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 சராசரியே வைத்துள்ளார். இதனால் பட்லருக்கு அணியில் இடம் …

Read More

50 ஓவர் உலககோப்பை வென்ற சூட்டீடன் 20 ஓவர் உலககோப்பை வெல்ல வேண்டும் : இயான் மோர்கானின் ஆசை

லண்டன், கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதனால் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திரில்லிங்காக …

Read More

உலககோப்பை வென்று ஒராண்டை நிறைவு செய்த இங்கிலாந்து அணி

லண்டன், கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் சமனில் இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் இரு …

Read More

இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் : மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆலோசனை

புதுடெல்லி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் அனுமதி இல்லாமல் விளையாட்டு போட்டிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கடந்த 4 மாதங்களாக இந்திய முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் …

Read More

லா லிகா கால்பந்து போட்டி : சாம்பியன் பட்டத்தை நெருங்கும் ரியல் மாட்ரிட்

கிரானடா, ஸ்பெயினில் நடந்து வரும் பழமை வாய்ந்த லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், கிரானடா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ரியல் மாட்ரிட் அணி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கிரானடா அணியை வீழ்த்தியது. கொரோனா இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் …

Read More

லா லிகா கால்பந்து போட்டி : ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியான 9-வது வெற்றி

கிரானடா, ஸ்பெயினில் நடந்து வரும் பழமை வாய்ந்த லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், கிரானடா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அந்த அணியின் பெர்லான்ட் மென்டி 10-வது நிமிடத்திலும், நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா 16-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.  இதனால் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் …

Read More

ஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் : ஜான்சன் ஹோல்டர் சாதனை முன்னேற்றம்

துபாய், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி,  3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர்  32 புள்ளிகளை கூடுதலாக …

Read More