தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் வரும் பகல் நிலவு, கல்யாணம் முதல் காதல் வரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி ஷங்கர். அதன்பிறகு இவர், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். இன்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இவருக்கு ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
