தமிழ் திரைத்துறையில் ஒரு பிரதானமான இயக்குனராகவும், நடிகராகவும், திகழ கூடியவர் அமீர் சுல்தான். இவர் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ் சினிமாவில் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய படமாக விளங்கி வருகின்றன.
