இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நிவேதா பெத்துராஜ் – நெகிழ செய்த அன்பு ரசிகர்

தமிழ் சினிமாவில் 2016ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இன்று இவர் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமீப காலமாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து பிரபலமாகி தனி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில், இவரின் தீவிர ரசிகர்கள் ஒருவர், “நிவேதா பெத்துராஜ்” என்று தன் கையில் பச்சை குத்தி இருப்பதை காட்டி நடிகை நிவேதாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து பல ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *